Friday 19 September 2008

துணிவுடைமை

சில நிமிடங்களின் தடுமாற்றங்கள் நம் வாழ்க்கையின் திசைகளை பல வேறாக
மாற்றக் கூடும் .என் நோயாளி இவர் .வயது ஐம்பது இருக்கும் .ஒரு மகன் இரண்டு மகள்கள் .கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக எச்.ஐ.வி. நோயுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் .


இவருக்கும் இவர் கணவருக்கும் ஒரே நேரத்தில் தான் ரத்த சோதனை செய்யப்பட்டதாம் .நோய் இருக்கிறது என்று தெரிய வந்ததும் இவர் கணவர் ஊரில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் .நோயுடன் சிறு பிள்ளைகளை பராமரிக்கும் பொறுப்பையும் தன் மனைவி தலையில் சுமத்தி விட்டு.

அவர் சொன்னார் ,"எனக்கு இங்கு மருத்துவமனையில் வந்து பார்க்கும் போது முதலில் பயமாக இருந்தது .பின்னர் இத்தனை பேர் இங்கு வந்து சிகிச்சை செய்து நலமாக இருக்கிறார்களே நாமும் அது போல இன்னும் சில வருடங்களேனும் நம்
பிள்ளைகள் வளரும் வரை உடல் நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன் .ஆனால் என் கணவருக்கோ இதெல்லாத்தையும் விட
தனக்கு நோய் இருப்பதும் அதன் அவமானமும் தான் பெரிதாக தெரிந்து விட்டது .எத்தனை நான் தேற்றியும் பலனில்லாமல் இப்படி செய்து கொண்டார்."

வருத்தப்படாதீர்கள் என்று சொன்னேன் .அவர் கூறினார் ,"இன்று எனக்கு இருப்பது வருத்தமல்ல ,கோபம் தான் .தன்னை பற்றி மட்டுமே நினைத்து அவர் தன் முடிவை தேடிக் கொண்டார் .என் பிள்ளைகளை பற்றியோ என்னை பற்றியோ
கவலைப் படவில்லை ."

இன்று தனியாகவே தன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார் இவர் .


3 comments:

ஆயில்யன் said...

//இன்று தனியாகவே தன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார் இவர் .///

அவரின் தன்னம்பிக்கையினை அவர்தம் பிள்ளைகளும் தொடர்ந்து கடைப்பிடித்து தம் அம்மாவினை நல்லதொரு நிலையில் வைத்திருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்!

யூர்கன் க்ருகியர் said...

தன்னம்பிக்கையே துணிவுடைமை!
அவங்க ரொம்ப வருடத்துக்கு வாழனும்

யூர்கன் க்ருகியர் said...

http://www.reuters.com/article/middleeastCrisis/idUSN24309543