Monday 15 September 2008

தோட்டம்


பாட்டிக்கு சொந்தமாக ஒரு தோட்டம் உண்டு .இதில் ஒரு பெரிய கிணறும் பம்ப் செட்டும் உண்டு .இதில் குளிக்க சென்ற நினைவிருக்கிறது சிறு வயதில் .

இதில் சில பனை மரங்களும் தென்னை மரங்களும் உண்டு .தன்னால் இயன்ற
வரை பாட்டி இதை மேற்பார்வை செய்து வந்தார் .வீட்டிலிருந்து வெகு தொலைவு நடந்து செல்வது போன்று தோன்றும் முன்பு .சமீபத்தில் சென்ற போது தான் தெரிந்தது அது ஒன்றும் அத்தனை தொலைவில் இல்லை என்பது .
இளநீர் பறிக்க சொல்லி அதை அங்கே வெட்டி குடித்த நினைவும் இருக்கிறது .

இதில் ஒரு பக்கத்தில் என் தாத்தாவின் கல்லறை இருக்கிறது .சில கற்களை அடுக்கி சதுரமாக கட்டப் பட்டது போல் தோன்றும் அது .நான், இதில் என் தாத்தாவை புதைத்துஇருக்கிறார்களோ என்ற பயத்தில்," இதற்கு அடியில் என்ன
இருக்கிறது?" என்று கேட்ட போது என் பெரியம்மா சொன்னார் ,"உன் அப்பா ,பெரியப்பாக்கள் அழுத கண்ணீரை பாட்டிலில் அடைத்து புதைத்தோம் "என்று .

இன்றோ அதே தோட்டத்தில் ,என் பாட்டி ,என் பெரிய அத்தை ,பெரிய பெரியப்பா
என்று நான்கு கல்லறைகள் இருக்கின்றன.குடும்பத்தின் தோட்டம் என்று மட்டும் அல்லாமல் குடும்பத்தின் கல்லறை தோட்டமும் ஆகி விட்டது அது.


4 comments:

ஆயில்யன் said...

/சமீபத்தில் சென்ற போது தான் தெரிந்தது அது ஒன்றும் அத்தனை தொலைவில் இல்லை என்பது .
///

வாழ்க்கையில் நிகழ்வுகளை கொஞ்சமாய் ரசிக்க ஆரம்பித்துவிட்டால் இப்படியே தான் இருக்கும்!

பொதுவாக தோட்டங்கள் நிறைய மவுனங்களை தரும்.
உங்க வீட்டு தோட்டம் மவுனங்களோடு சேர்த்து, நிறைய நினைவுகளையும் வைத்திருக்கிறது

Anonymous said...

,"உன் அப்பா ,பெரியப்பாக்கள் அழுத கண்ணீரை பாட்டிலில் அடைத்து புதைத்தோம் "என்று

நெஞ்சைத் தொட்டது.
குமுறி அழுத நினைவுகள் எனக்கு உண்டு.

அன்புடன்
-சூர்யா

geevanathy said...

தோட்டம், பல நினைவலைகளை மீட்டிப்போனது. உங்கள் கவிதைகளையும் வலைப் பதிவையும் இன்று காணக் கிடைத்தது. மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

Dr.த.ஜீவராஜ்
இலங்கை.
http://geevanathy.blogspot.com/

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கல்லறைகள்...தோட்டத்தில் என்பது ஆச்சரியமே! எங்கள் ஈழத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் பொதுவாக இருக்கும்.
அதுவும் பொதுவாக கத்தோலிக்க;இஸ்லாமிய சகோதரர்கள் கல்லறையே...சைவர்கள் உடலை தகனம் செய்வதே ..வழமை..