வேண்டுவோருக்கு பொன்னும் அருளும் கொட்டிக் கொடுக்கும் ஏழுமலையான் சார்ந்த செய்தி இது .
இங்கு சில அபிஷேகங்களும் பூஜைகளும் இன்னமும் முப்பது வருடங்களுக்கு முன்பதிவு செய்யப் பட்டுவிட்டனவாம் .இதனால் இதிலும் எதிலும் போலவே "தக்கல்" முறையை தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது .இந்த முறைப்படி ரூ.ஐம்பது ஆயிரம் கட்டி அதனோடு உங்களுக்கு தேவஸ்தான உறுப்பினர்கள் இன்னமும் சில அதிகாரிகள் போன்றோர் சிபாரிசும் இருந்தால் உங்களுக்கு இந்த சேவைகளில் முன்னுரிமை வழங்கப்படும் .
என்ன நம்பிக்கையில் இந்த முன்பதிவுகள் செய்யப் படுகின்றன ?
அதிக பணம் வசூலிப்பதற்காக சில இடங்கள் காலியாக வைக்கப்படுகின்றனவா ??
எதற்காக ஒரு வழிபாட்டு தலத்தில் பணம் சார்ந்த இத்தனை பேதங்கள் ???
வாசலிலிருந்து சேவைகள் வரை ....
பணத்திற்கும் பணக்காரர்களுக்கும் மட்டும் இங்கு இத்தனை தூரம் முன்னுரிமை கொடுக்கப்படுவது ஏன் ?
அந்த ஏழுமலையானுக்கு தான் வெளிச்சம் .....
Friday, 7 November 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
மிகச் சரியாகக் கேட்டீர்கள்?
ஏழுமலையானுக்கு வெளிச்சமாகுமா?
கல்கியாக அவதரிக்கும் நாளில் வெளிச்சமாகலாம் ?
எனக்கு எங்க ஊரு ஏழுமலையானே போதும்... நல்லாவே அருள் புரிவார்...
Post a Comment