பாட்டி ஊரில் இருந்த போது எப்படியும் மாதம் ஒரு கடிதம் எழுதி விட வேண்டும் என்று அப்பா வற்புறுத்துவார் .சில வேளைகளில் ,பாட்டிக்கு தான் எழுத படிக்க தெரியாதே ,இந்த கடிதங்கள் எதற்கு என்று நான் நினைத்ததுண்டு .இருந்தாலும் கடமையாக முந்தைய கடிதத்தில் விட்ட இடத்திலிருந்து கடிதம் எழுதி விடுவேன் .
இதுபோல் ஒரு முறை ,நான் பள்ளியில் நடந்த சில போட்டிகளில் பரிசு பெற்றதை எழுதியிருந்தேன் .இந்த கடிதம் சென்ற சில வாரங்கள் இருக்கும் ,என் சின்ன அத்தை (இவர் தென்காசியில் இருக்கிறார் ) சென்னை வந்திருந்தார் .வீட்டிற்கு வந்த இவர் ,"நீ நிறைய பரிசு வாங்கியிருக்கிறாயாமே ?" என்று விவரம் கேட்டுக்கொண்டிருந்தார் .என் அப்பா ஆச்சரியமாக ,"உனக்கு யார் சொன்னது ?"
என்று கேட்டதும் அத்தை சொன்னார் ,"அம்மா ,இதைத்தான் ஊர் பூரா சொல்லிக் கொண்டிருக்கிறாள் ,'என்று .
பாட்டி அன்பை அத்தனை எளிதில் வெளிக் காட்டுபவர் இல்லை .நான் விளையாட்டாக எண்ணிய கடுதாசி விஷயம் எத்தனை முக்கியமானதாக இருந்திருக்கிறது பாட்டிக்கு !
Monday, 5 January 2009
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
பூங்குழலி,
நல்லா இருக்கு.
நீங்கள் எழுதிய “கடுதாசி”யை யாரேப் படிக்கச் சொல்லி கேட்டிருப்பார். பெருமிதப்பட்டிருப்பார்.
ஒரு தடவை நான் என் பாட்டிக்கு(அப்போது மங்கிய பார்வை) “கலை மகள்” சிறு கதை ஒன்றை வாசித்து பாட்டி காதால் கேட்க, ஒரு சொல்லை உச்சரிக்க சிரமப்பட்டேன். அந்தச் சொல் “ஹேஷ்யம்”.கஷாயம் என்று spell பண்ணியதாக ஞாபகம்.
கணவனுக்கு முன் மனைவி கண்ணாடிப் போட்டால்
ரொம்ப grade ஆகி விடுவாள் என்று தாத்தா வாங்கிக் கொடுக்கவில்லை என்று அம்மா பின் நாளில் சொன்னாள்.
நல்லாயிருக்கு..
தங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி வண்ணத்துபூச்சியாரே..உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
பதிவும் சுவாரசியம்.
“கலை மகள்” சிறு கதை ஒன்றை வாசித்து பாட்டி காதால் கேட்க, ஒரு சொல்லை உச்சரிக்க சிரமப்பட்டேன். அந்தச் சொல் “ஹேஷ்யம்”.கஷாயம் என்று spell பண்ணியதாக ஞாபகம்// பின்னூட்டமும் சுவாரஸ்யம்..
பதிவும் சுவாரசியம்.பின்னூட்டமும் சுவாரஸ்யம்
உண்மை தான் அவரின் நினைவுகளையும் பதிவு மீட்டதில் மகிழ்ச்சி
நம்ம பசங்க சாதிக்கறாங்க ன்னு பெருமிதம் தான்..! பரிசா சின்னதா ஒரு பேனா கிடைச்சுது ன்னு எங்க தாத்தா ரொம்பவே சந்தோசமடைஞ்சதெல்லாம் இப்ப ஞாபகம் வருது..!
மகிழ்ச்சியின் மடியில்
இந்த மடலின் மகிமையை
மனதார படிக்க தந்தமைக்கு
வாழ்த்துக்கள் பூங்குழலி
அன்புடன் இளங்கோவன், அமீரகம்
Post a Comment