Monday, 13 April 2009

திருமணங்கள் (2)

இந்த செய்தி ஒரு பெண் நோயாளியைப் பற்றியது .இவர் ஒரு விதவை .இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் .இதில் மகளுக்கும் நோய் பாதிப்பு உண்டு .இவருக்கு பல காலமாக மறுமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது .இதில் தப்பொன்றும் இல்லை .ஆனால் நோய் இல்லாத ஒருவரை தான் மணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருந்தார் .இவரின் நோய் பற்றி அறியாமல் இவருடன் பழகிய ஒருவர் ,நோய் பற்றி தெரிய வந்ததும் காணாமல் போனார் .ஒருவர் இதையும் மீறி சரியென்று வந்த போது, மகளுக்கும் இருப்பது தெரிந்ததும் விலகினார் .

நோய் இருக்கும் சிலர் இந்த பெண்ணை மணந்து கொள்ள முன்வந்த போது ,மறுத்து விட்டார் இவர் ."இருவருக்கும் மருந்துகளுக்கே செலவு சரியாக இருக்கும் ,இதில் என்ன குடித்தனம் செய்ய முடியும் ?"என்பது இவர் கேள்வி .இது நியாயமான கேள்வி தான் என்றாலும் இதற்காக நோயில்லாத ஒருவரின் வாழ்க்கையை சீர்குலைக்க முடியுமா ?


இந்த பெண்ணுக்கு நாளடைவில் இதுவே மனநோயாகிப் போனது.தன் மகள் தனக்கு தடையாக இருப்பதாகவும் நினைக்க துவங்கினார் இவர் .ஒரு முறை பரிசோதனைக்கு வந்த போது ,தன் மகள் இறந்து விட்டதாகவும் தன் திருமணத்திற்கு ஏதும் தடை இல்லை எனவும் உடனே மாப்பிள்ளை பார்க்க வேண்டும் எனவும் கட்டளையிட்டார் .

உடன் உறவினர் என்று எவரும் இல்லாத நிலையில் இவரை மனநல மருத்துவரிடமும் அனுப்ப முடியவில்லை .நாங்கள் சொல்லும் ஆலோசனைகள் எதையும் கேட்கும் முடிவில் அவரும் இல்லை .


2 comments:

"உழவன்" "Uzhavan" said...

இது என்ன தொடர்பதிவா??? தாங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளமுடியவில்லை.

பூங்குழலி said...

"நோயில்லாத ஒருவரின் வாழ்க்கையை சீர்குலைக்க முடியுமா ?"

இதுவே தான் நான் சொல்ல வந்தது .நோயாளிகள் திருமணம் என்று வரும் போது நோய் இல்லாதவர்களையே திருமணம் செய்ய விருப்பப்படுகிறார்கள் .தங்கள் நோய் பற்றி சொல்லி செய்து கொண்டால் பரவாயில்லை ,பல நேரங்களில் சொல்லாமல் .