பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன் என் மிதிவண்டியில் .ஒரு சந்தில் திரும்பும் போது எதிரே வந்த ஒரு பெண் என் மீது மோதி ..இருவருக்கும் காயம் .தவறு அந்த பெண் மீது .அங்கே ஒரு கடையில் நின்றுக் கொண்டிருந்த தன் நண்பர் (அ) காதலருக்கு கையசைத்துக் கொண்டே தவறான பக்கத்தில் வந்து மிதிவண்டியைத் திருப்பினார் .(இதைப் பார்த்து அங்கிருந்த நபர் சிரித்துக் கொண்டே இருந்தார் .விழுந்த பின்பும் அவர் அவ்விடத்திலிருந்து அசையவேயில்லை .)
முழங்காலில் சில ரத்தக் காயங்களுடன் வீடு திரும்பினேன் .பாட்டி வீட்டில் இருந்தார் .என்னவென்று அவர் விசாரிக்க நானும் நடந்ததைக் கூறினேன் .அடுத்து நடந்தது நான் சற்றும் எதிர்பாராதது .என் பாட்டிக்கு அத்தனை கோபம் வந்து நான் பார்த்ததே இல்லை .அது மட்டுமல்ல அந்தப் பெண்ணை , இங்கு எழுத முடியாத சில வார்த்தைகள் சொல்லித் திட்டினார்." பிள்ள மேல
இப்படி வந்து கண்ணு மண்ணு தெரியாம மோதியிருக்காளே "என்று அந்த வசை மழையை முடித்துக் கொண்டார் .
இதில் நான் அறிந்து கொண்ட செய்திகள் ....
1. பாட்டி என் மீது வைத்திருந்த பாசம் (அதை அவர் காட்டிக் கொள்ளாத போதும் )
2.பாட்டிக்கு சில சந்தர்ப்பங்களில் கோபம் வரும்
3.பாட்டிக்கு சில (பல?)கெட்ட வார்த்தைகள் தெரியும் .
Friday, 3 April 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
பாட்டிகளெல்லாம் இப்படித் தான் பூங்குழலி. பார்க்க அம்பி போல் இருந்தாலும், உள்ளே ஒரு அந்நியன் உண்டு. ;)
பார்க்க அம்பி போல் இருந்தாலும், உள்ளே ஒரு அந்நியன் உண்டு. ;)
ஹா ஹா
:-))
//விக்னேஷ்வரி said...
பாட்டிகளெல்லாம் இப்படித் தான் பூங்குழலி. பார்க்க அம்பி போல் இருந்தாலும், உள்ளே ஒரு அந்நியன் உண்டு. ;)
//
நல்ல கமெண்டு!!!!
Post a Comment