Monday 6 April 2009

தேங்காய் டீ !

எங்கள் ஊரில் பெண்கள் பல மணிகள் தொடர்ந்து பீடி சுற்றுவதால் இடையே களைப்பு நீக்க டீ அருந்துவர் .இதில் எவரும் விருந்தினர் வந்துவிட்டாலும் அவர்களுக்கும் இந்த டீயும் ,வெண்ணெய் மாச்சிலும் (பட்டர் பிஸ்கெட்!) வழங்கப்படும் .

இது சகஜம் தானே என்று நினைப்பவர்களுக்கு ,இது சாதாரண டீயில்லை .சரி ,இதில் என்ன சிறப்பு ?

டீயுடன் துருவிய தேங்காயையும் சேர்த்து போட்டு தருவார்கள் .டீயில் முறுக்கை உடைத்துப் போட்டு ஊற வைத்து சாப்பிட்டிருக்கிறேன் .இஞ்சி சுக்கு என எதை எதையோ சேர்த்தும் குடித்திருக்கிறேன் .ஆனால் இந்த தேங்காய் டீயை ஆலடிப்பட்டியைத் தவிர வேறு எங்கும் சுவைத்ததில்லை .


8 comments:

வல்லிசிம்ஹன் said...

பேரைக் கேட்டாலே நல்லா இருக்கு. சுவையாவும் இருக்கும்னு நினைக்கிறேன்.
நன்றி பூங்குழலீ.

பூங்குழலி said...

வித்தியாசமான சுவையா இருக்கும் .குடித்து பார்த்து விட்டு சொல்லுங்கள்

அமுதா said...

புதுசா கேள்விப்படறேன்..

பூங்குழலி said...

நானும் வேறு எங்கும் கேள்விப்பட்டதில்லை

ஆயில்யன் said...

அட கேக்கவே வித்தியாசமா இருக்கே!

அக்கா கேரளா பார்டரா உங்க ஊரு??

அப்படின்னா இன்னிக்கே டெஸ்ட் பண்ணி பார்த்துடறேன்! :)

பூங்குழலி said...

எங்க ஊர் தென்காசி பக்கத்தில இருக்கு

விக்னேஷ்வரி said...

அட, நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு வித்தியாசமான காம்பினேஷன். உங்க ஊர் பக்கம் வந்தால், கண்டிப்பாக ட்ரை பண்றேன்.

பூங்குழலி said...

எங்க ஊருக்கு வாங்க சந்தோஷம் ,ஆனா இந்த டீ எந்த கடையிலேயும் கிடைக்காது ..நாமளே டீயில தேங்காய் துருவலைப் போட்டு குடிச்சிற வேண்டியது தான் .ஒரு கப்புக்கு ரெண்டு இல்லைனா மூணு ஸ்பூன் துருவல்