Saturday 11 April 2009

திருமணங்கள்

ஒரு இளைஞர் ,திருமணமாகாதவர் கிட்டத்தட்ட 2002ல் இருந்து சிகிச்சைக்கு வந்து கொண்டிருப்பவர் .இவர் திடீரென சில வருடங்களாக வரவில்லை .பின்னர் திரும்பவும் வந்து நின்றார் 2007ல் ,தன் மனைவியுடன் .

இந்த நோய் பற்றி எதுவும் தெரிவிக்காமல் ,ஒரு அநாதை பெண்ணை இவருக்கு மணம் செய்து வைத்திருக்கின்றனர் இவர் பெற்றோர் .மனைவிக்கு தெரியக் கூடாதென மருந்துகளையும் சாப்பிடாமல் நோய் முற்றிப் போய் ,வந்து சேர்ந்தார். இதனூடே அந்த பெண்ணையும் நோய் பாதித்திருந்தது .

அந்த பெண்ணுக்கு அவரும் அவர் பெற்றோரும் சேர்ந்து செய்த கொடுமைகள் ,எண்ணிலடங்காதவை .சில மாதங்களுக்கு முன் இவர் இறந்து போனார் .அந்த பெண்ணை இவர் பெற்றோரும் ஆதரிக்க மறுத்து விட்டனர் .அவர்களுக்கு தங்கள் நோயாளி மகனைப் பார்த்துக் கொள்ள செலவில்லாமல் ஒரு செவிலி தேவைபட்டிருக்கிறாள் அவ்வளவே .

திருமணத்திற்கு முன் எச் .ஐ .வி பரிசோதனை பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கிறது .
இதை கட்டாயமாக்குவதில் பல சட்ட சிக்கல்கள் இருக்கின்றன .திருமணம் செய்பவர்கள் தாங்களே தார்மீகப் பொறுப்பேற்று இந்த சோதனை செய்ய முன்வரவேண்டும் .நோய் இருப்பதை அறிந்தவர்கள் இதை பற்றி அறியாத பேதைகளின் வாழ்க்கையை சீர்குலைக்காமல் இதே நோய் பாதிப்பு உள்ளவர்களை மணந்துகொள்ள முன்வரலாம் .


7 comments:

வடுவூர் குமார் said...

கொடுமையப்பா!

யூர்கன் க்ருகியர் said...

too bad!

ஆயில்யன் said...

இந்த கருத்து இப்பொழுது உலகமெங்கும் வலுப்பெற்று வருகிறது!

எத்தனையோ சடங்குகளில் கவனமாக கையாளும் நம் கலாச்சாரம் இதை கண்டிப்பாக ஏற்றுக்கொண்டு இனிய வாழ்க்கை வாழ்வதற்கேற்ற வகையில் வழி அமைத்து தரவேண்டும்!

ஆ.ஞானசேகரன் said...

என்ன கொடுமை....

M.Rishan Shareef said...

:(

Subash said...

ம்ம்ம்

பூங்குழலி said...

உங்கள் கருத்துகளுக்கு நன்றி