வைத்தியலிங்கத் தாத்தா இறந்து சரியாக ஐம்பது நாட்களில் நான் பிறந்தேன்.
அம்மா சொல்வார்கள், பாட்டி சாயலில் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாக . நானும் கொஞ்சம் அதே சாயல் கொண்டு பிறந்ததால் அம்மா எனக்கு பாட்டியின் பெயரைப் போல வைக்க வேண்டும் என்று சொன்னார்களாம் .பாட்டி பெயர் " பத்திரக்காளி" .என் அம்மா இதை சற்று (?) மாற்றி "பத்ரா " என்று பெயர் வைக்கலாம் என்று சொன்ன போது ,அப்பா வைத்தால் பத்திரக்காளி என்று வைக்க வேண்டும் இல்லையென்றால் வேறு பெயர் தான் என்று கூறிவிட்டாராம் .பூங்குழலி என்ற பெயர் என் அப்பா மனதில் பல வருடங்களுக்கு முன்னரே நிச்சயிக்கப்பட்டு விட்டது .
பொழுது போகாத ஒரு மதியத்தில் பாட்டியுடன் வம்பு பேசிக் கொண்டிருந்தேன் ."ஏன் பாட்டி ,தாத்தா செத்து கொஞ்ச நாளேயே நான் பொறந்தேனே ,அப்ப நா தாத்தாவோட மறுபிறவி தான ?அப்ப எனக்கு ஏன் தாத்தா பேர வைக்கல ?"என்று சும்மா கேட்டு வைத்தேன் விளையாட்டாக .இது போல அபிப்பிராயம் பாட்டிக்கு இருக்க கட்டாயமாக வாய்ப்பே இல்லை என்றே நினைத்திருந்தேன் .
நான் கேட்டு முடித்ததும் பாட்டி சொன்னார் ,"ஆமாளா,அதான் ஒனக்கு "லிங்கேஸ்வரி " ன்னு பேர் விடச் சொன்னேன் ."
Friday, 17 April 2009
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அட நம்ம டாக்டர் ப்ளாக்..
லின்கேஸ்வரி தான் டாக்டர் நல்லா இருக்கு.. பேரை மாத்திடுங்க. :))
பூங்குழலி தான் நல்லா இருக்கு !
நீங்க சஞ்சய் சொல்றமாதிரி லிங்கேஸ்வரி மாத்திட்டு பிறகு அதை மாத்திட்டு பூங்குழலி வைச்சுக்கோங்க !
ஒ.கே :))))
அடடா ,இந்த குழப்பத்துக்கு தான் எங்கப்பா அப்பவே முற்றுப் புள்ளி வச்சிட்டாரே...
என் பேர் பூங்குழலி மட்டும தான்
இரண்டு பேருமே நல்லா இருக்கு
இரண்டு பேரா வைத்து கொள்ளலாம்...!!!
நல்லா எழுதியிருக்கீங்க.
லிங்கேஸ்வரி பூங்குழலி ன்னு வைக்கலாமா இல்லை பூங்குழலி லிங்கேஸ்வரி ன்னு வைக்கலாமா ?உங்கள் மூவருக்கும் என் பாட்டியின் ஆசிகள் நிச்சயம் உண்டு
Post a Comment