Tuesday, 7 July 2009

மாப்பிள்ளை முறுக்கு

சிகிச்சைக்கு வரும் ஒரு தம்பதியர் இவர்கள் .கணவர் ஓரினச் சேர்க்கையின் மூலம் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர் .இப்போது மனைவிக்கும் இவர் மூலம் இந்நோய் .இரண்டு குழந்தைகள் .முறையான சிகிச்சை ,அதை செய்து கொள்வதற்கேற்ற வசதிகள் ,அமைதியான குடும்பம் என்று பெரிய சிக்கல்கள் ஏதும் இன்றிதான் போய்க் கொண்டிருக்கிறது இவர்கள் வாழ்க்கை .

ஒரு முறை மருத்துவமனைக்கு வந்த போது ,இவர் மனைவி ரொம்பவே வருத்தமாகவும் ,படபடப்பாகவும் இருந்தார் .என்ன என்று விசாரித்த போது ,"இவரு ரொம்ப சண்ட போடுறார்,"என்று கூறினார் .சண்டைக்கான காரணம் ,"இவ அம்மா அப்பா என்ன மரியாதையா நடத்தல .என்ன பாக்கும் போது ஏதோ ஒப்புக்கு பேசி வைக்கிறாங்க .என்கிட்டே ,மாப்பிள்ள நல்லா இருக்கீங்களா ?மாத்திரையெல்லாம் சரியா சாப்பிடுறீங்களா ன்னு கூட விசாரிக்கறதில்ல .அப்புறம் கோவம் வருமா ,வராதா ?"


5 comments:

ஆ.ஞானசேகரன் said...

நல்லா இருகே....

கோவி.கண்ணன் said...

கொழுப்பெடுத்தவர், தவறுசெய்துவிட்டோம் என்கிற தாழ்வுணர்வு கூட இல்லாமல் மரியாதை எதிர்பார்க்கும் ஜென்மங்களுக்கு மனநோயும் சேர்ந்தே இருக்குமோ.

ஒளியவன் said...

குற்ற உணர்வின் குறைபாடு!

பூங்குழலி said...

குற்ற உணர்வின் குறைபாடு!”

ரொம்ப சரியா சொன்னீங்க பாஸ்கர்.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்