Friday 7 August 2009

பாட்டி

ஊருக்கு போய் வந்ததில் சில சுவாரசியமான நிகழ்வுகளை சேமிக்க முடிந்தது .


என் அத்தை ஒரு முறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தாராம் .உடன் பயணம் செய்தவர்களில் ஒரு வயதானவரும் இருந்தார் போல .அவர் இவர்களுடன் பேசிக் கொண்டு வந்ததில் அவரும் ஆலடிப்பட்டியையோ அதன் சுற்று வட்டாரத்தையோ சேர்ந்தவர் என்று தெரிந்ததாம் .அது மட்டுமல்ல அவர் என் பாட்டியையும் தாத்தாவையும் நன்கு அறிந்திருந்தாராம் .

அவர் சொன்னாராம் ,"உங்க அம்மா ரொம்ப அழகு .அவங்களை கல்யாணம் கட்டிக்கிட பெரிய போட்டியே இருந்துது .அதில நானும் ஒருத்தன் .நானும் உங்க அப்பாவும் ,வசதி மத்த விஷயங்கள்ல ஒரே அளவு தான் .ஆனா ,உங்கம்மாவ வைத்தியலிங்கப் பூசாரிக்குக் கட்டிக் கொடுத்திட்டாங்க .அவரு புத்திசாலி .அவரும் உங்கம்மாவும் படிப்பு இருந்தா நல்லா இருக்கலாம்ன்னு தெரிஞ்சு உங்க எல்லாரையும் கஷ்டப்பட்டு நல்லா படிக்க வச்சிட்டாங்க .நீங்களும் நல்லா இருக்கீங்க .நா என் பிள்ளைகளைப் படிக்க வைக்கல ."

இதை என் அத்தை என் பாட்டியிடம் வந்து சொல்ல ,பாட்டிக்கு சரி கோபம் வந்ததாம் ."எவன் அவன் ,இந்த வயசுல (பாட்டிக்கு அப்போது எழுபது வயசுக்கு மேலிருக்கும் ) இந்த பேச்சை பேசுற வெவஸ்த கேட்டவன் " என்று திட்டித் தீர்த்தாராம் .


9 comments:

தருமி said...

வைத்தியலிங்கப் பூசாரி .. கேட்ட பெயர் மாதிரி இருக்கு.....

தருமி said...

ஆனால், ஆலடியில் வைத்தியலிங்கங்களுக்குக் குறைச்சல் ஏது? ஊரு சாமியாச்சே......

பூங்குழலி said...

ஆனால், ஆலடியில் வைத்தியலிங்கங்களுக்குக் குறைச்சல் ஏது? ஊரு சாமியாச்சே......

உண்மை தான் வைத்தியலிங்கங்களுக்கு ஊரில் குறைவே கிடையாது

கிருஷ்ண மூர்த்தி S said...

பாட்டியின் கோபத்தில் ஒரு நியாயம் இருக்கிற மாதிரி, அம்புட்டு வருஷம் கடந்தப்புறமும் உண்மையை வெட்கமில்லாமல், மறைவில்லாமல் சொன்னவரிடமும் ஒரு நேர்மை தெரிகிறது!

பூங்குழலி said...

அம்புட்டு வருஷம் கடந்தப்புறமும் உண்மையை வெட்கமில்லாமல், மறைவில்லாமல் சொன்னவரிடமும் ஒரு நேர்மை தெரிகிறது!

ஆமாம் ,இதில் அவரின் நேர்மையும் ஒரு ஏக்கமும் கூட தெரிகிறது

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...
This comment has been removed by the author.
துபாய் ராஜா said...

பாட்டிக்கு வந்த கோபம் சரிதான். :))

பூங்குழலி said...

பாட்டிக்கு வந்த கோபம் சரிதான். :))

:))))))