முதலில் கதையை ஒரு கவிதையாக சொல்ல முற்பட்ட சேரனுக்கு பாராட்டுக்கள் .
காமெராவை இயக்கியவருக்கு பாராட்டுக்கள் .
கடிதம் எழுதுவது எப்படி ,அது எப்படி பயணிக்கிறது என்பதை இந்த தலைமுறைக்கு சொன்னதுக்கும் சேரனுக்கு பாராட்டுக்கள் .
நிலா ,காற்று ,வானம் பாடல் இனிமை .
அப்புறம்,
காதலை கவிதையாக சொல்வது சரிதான் அதற்கென ஒரு மூன்று மணிநேரம் அதையே ஒரே குரலில் சொல்லிக் கொண்டிருப்பது சரியா ?
சேரன் இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை(தெரியும் ...பெரிய நடிகர்கள் ஒப்புக் கொள்ளவில்லை )
ஒப்பனை வேறு சரி சொதப்பல் .
ஆனாலும் சேரன் நதீராவை விட தன்னை அதிகம் காதலிக்கிறார் என்பது தெரிகிறது ,படம் முழுவதும் அவரே .அவர் கடிதங்களையும் அவரே வாசிக்கிறார் .நதீராவின் கடிதங்களையும் பெரும் நேரம் அவரே வாசிக்கிறார் .மூன்று மணி நேரத்தில் முக்கால் பாகத்திற்கு மேல் இவர் முகம் மட்டுமே திரையில் தெரிகிறது .
பத்ம பிரியா பல காட்சிகளில் ஒரே உடை .ஒரே காமெரா ஆங்கிளில் அவரைக் காண்பிக்கிறார்கள் .நன்றாக தான் நடித்திருக்கிறார் .
விஜயகுமாரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது .
சேரனின் மனைவியாக வருபவரின் ஒப்பனையும் சரியில்லை .தேவையில்லாமல் இழுத்து இழுத்து பேசுகிறார் .
மகனின் காதலும் கொஞ்சமும் யதார்த்தமில்லாமல்... மொபைலுக்கும் கடிதத்திற்கும் அல்லது அந்தகால காதல் இந்த கால காதல் என்று வேறுபடுத்த முயன்றிருக்கிறார் .மகனாக வருபவர் அவர் வேலையை சரியாகத் தான் செய்திருக்கிறார் .ஆனால் கடிதம் வாசிப்பதை தவிர வேறு யாருக்கும் எந்த வேலையும் பெரிதாக இல்லை .
கடிதம் சரியாக போகிறதா என்று பார்க்கக் கூடவே சேரன் செல்லும் காட்சி ஒரு அழகிய கவிதை .அதே போல் டிரங் கால் போடப்போகும் இடத்தில் "மழை எப்ப நிக்கும்" என்று கேட்கும் காட்சியும் .இதுபோல் காட்சிகளை கவிதையாக்காமல் கவிதைகளை வாசிப்பதை மட்டுமே காட்சியாக்கியது ஏன் ?
Monday, 17 August 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நல்ல விமர்சனம்! :-)
பொக்கிஷம் படம் பற்றி பயங்கர காத்திரமான விமர்சங்களைத்தான் படித்திருந்தேன். ஆனால் நடுநிலைமையில் விமர்சனம் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
சேரன் எப்பொழுதும் தன்னை முன்னிறுத்தும் அரசியலில் கெட்டிக்காரர். ஆகையால் அவரே அவர் படங்களின் பலவீனம்.
நன்றி சந்தனமுல்லை ,பாலமுருகன்
Post a Comment