Tuesday, 25 August 2009

நானும் அவளும்


அவள் பாடிக்கொண்டே தான் இருந்தாள்
பசுமை போர்த்திய ஓடையின் கரையில்
உற்சாகம் சுமந்த கதிரின் ஒளியில்
துள்ளிக் களிக்கும் மீன்களை பார்த்துக் கொண்டே

நான் அழுதுக்கொண்டே தான் இருந்தேன்
நிழல்கள் போர்த்திய நிலவின் ஒளியில்
கண்ணீராய் இலைகளை ஓடையில் உதிர்க்கும்
மே மாத மலர்களைப் பார்த்துக் கொண்டே

நான் நினைவுகளால் அழுதேன்
அவள் நம்பிக்கைகளால் பாடினாள்
என் கண்ணீரைக் கடல் விழுங்கிக் கொண்டது
அவள் பாடல்கள் காற்றில் உயிர் இழந்து கரைந்தன


Song (She Sat And Sang Alway)
by Christina Rosetti

She sat and sang alway
By the green margin of a stream,
Watching the fishes leap and play
Beneath the glad sunbeam.

I sat and wept alway
Beneath the moon's most shadowy beam,
Watching the blossoms of the May
Weep leaves into the stream.

I wept for memory;
She sang for hope that is so fair:
My tears were swallowed by the sea;
Her songs died on the air.


4 comments:

சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லாருக்குங்க...

//நான் நினைவுகளால் அழுதேன்
அவள் நம்பிக்கைகளால் பாடினாள்
என் கண்ணீரைக் கடல் விழுங்கிக் கொண்டது
அவள் பாடல்கள் காற்றில் உயிர் இழந்து கரைந்தன//

இந்த வரிகள் மனதை என்னவோ செய்கின்றன!

மொழியாக்கத்துக்கு நன்றி!

பூங்குழலி said...

ஆமாம் சந்தனமுல்லை ,ஏதோ ஒரு இழப்பை அந்த வரிகள் உணர்த்துகின்றன .உங்கள் பாராட்டுக்கு நன்றி

Prapa said...

//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

பூங்குழலி said...

....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,
அப்படி என்ன யோசிக்கப் போறீங்க

வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//
இதை சொல்லவே இல்லையே .கண்டிப்பா வரேன்