Thursday, 12 November 2009

இப்படியும்

சில மாதங்களுக்கு முன்னால் நடந்தது இது .ஒரு தம்பதியர் .ஒரிசாவிலிருந்து .இவர்களுடன் ஒரு பெரியவர் .சிகிச்சைக்கென வந்திருந்தார்கள் .ஒரு மாதம் முடிந்திருக்கும் .மீண்டும் இரு இளைஞர்கள் ஒரிசாவிலிருந்து .உடன் அதே பெரியவர் .இவருக்கு மட்டும் ஆங்கிலம் தெரியும் .
உடன் வருபவர்களுக்கு ஒரியா மட்டுமே தெரியும் .

ஒவ்வொரு முறையும் இவர் வேறு நபர்களுடன் வருவதை நான் ஒரு கேள்வியுடன் பார்ப்பதை உணர்ந்து கொண்ட அவர் சொன்னார் ,"நான் அரசு பணியிலிருந்து ஒய்வு பெற்றவன் .எங்கள் ஊரில் எச்.ஐ.வி நோய்க்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் என்று எதுவும் இல்லை .அதனால் நோய்க்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறவர்களை நான் இங்கே அழைத்து வருகிறேன் .அவர்கள் கொஞ்சம் தேறியதும் அவர்களை அங்கேயே சிகிச்சையை தொடரச் செய்கிறேன் ."

எச்.ஐ.வி என்ற பெயரை சொல்லவே கூச்சப்படும் பலர் இருக்க வயதான காலத்தில் இவ்வாறு சேவை செய்ய இப்படியும் சிலர் .


2 comments:

க.பாலாசி said...

//தீவிர சிகிச்சை தேவைப்படுகிறவர்களை நான் இங்கே அழைத்து வருகிறேன் .அவர்கள் கொஞ்சம் தேறியதும் அவர்களை அங்கேயே சிகிச்சையை தொடரச் செய்கிறேன் ."//

மிக நல்ல சேவை.....நல்ல சிந்தனை இடுகை....

பூங்குழலி said...

ஆமாம் பாலாசி ,தன ஓய்வை இப்படி பயனுள்ளதாக ஆக்கிக் கொள்பவர்களே ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள் .ஆனால் எத்தனை பேருக்கு இந்த பெரிய மனது வரும் ...