Thursday, 4 March 2010

நித்தியானந்தா

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே புரட்டி போட்ட ஸ்கூப் நியூஸ் இதுதான் .ஆனால் இத்தனை முக்கியத்துவம் தர இந்த செய்தியில் என்ன இருக்கிறது ?அப்படி என்ன வேறு எவரும் வேறு எந்த சாமியார்களும் செய்யாததை இவர் செய்து விட்டார் என்று இத்தனை பிளாஷ் நியூஸ் ?இத்தனை பதிவுகள் ?இத்தனை சாடல்கள் ?

ஆனால் நித்தியானந்தாவிற்கு இது நிச்சயம் நல்ல விளம்பரம் தான் .இதற்கு முன் இவரை அறியாத பலருக்கும் இப்போது அவர் அறிமுகமானவராகி இருக்கிறார் .ஒருவேளை அதற்காக அவரே இந்த சிடியை பதிவு செய்திருக்கக் கூடும் ?சன் டிவியில் நல்ல விலைக்குக் கூட விற்றிருக்கலாம் .இல்லை இவருக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் ஏதும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையோ என்னவோ இப்படியாக பழி? வாங்கியிருக்கிறார்கள் .

கொஞ்ச நாளில் எல்லா பரபரப்பு செய்திகளைப் போல இதுவும் கடந்து போகும் ....7 comments:

Anonymous said...

ஆமாம் . மனிதர்கள் செய்யும் தவறைதான் அந்த ஆளும் செய்திருக்கிறான். என்ன சாமியார் என்பதே வேடமான வாழ்க்கை அந்த வேடம் கலைப்பதை எண்ணி சிலர் மகிழ்ச்சியும் கலைந்ததை எண்ணி சாமியாரும் சிலர் வருந்தலாம். இறைவன் மனிதர்களை தான் படைக்கிறான். சாமியார்களை அல்ல. சாமியாரை படைக்க வேண்டியிருந்தால் கடவுள் அவனுக்கு பால் உறுப்புகளையும். அதற்கான கார்மோன்களை சுரக்கமால் செய்திருக்க வேண்டும். அந்த ஆளுக்கு நல்ல பேச்சாற்றல் ஆன்மீக புலமை உள்ளதை மறுக்க வியலாது. அவனை மனிதனாக பார்ககமால் கடவுளை பார்த்ததும். அந்த சாமியார் வேடமிட்டதும் தவறு

அண்ணாமலையான் said...

சரியா சொன்னீங்க

பூங்குழலி said...

அவனை மனிதனாக பார்ககமால் கடவுளை பார்த்ததும். அந்த சாமியார் வேடமிட்டதும் தவறு

உண்மை தான் பிச்சுமணி அவர்களே ...ஆனால் இதில் வரம்பு மீறியது சன் டிவி தான்

பூங்குழலி said...

சரியா சொன்னீங்க

நன்றி அண்ணாமலையான் ..என்னமோ உலகத்திலேயே இது யாரும் கண்டிராதது மாதிரி இதற்கு விளம்பரம் ...எரிச்சல் போங்க .... பிட் ஓட்ட வேண்டும் என்று முடிவு செய்திருந்தால் சன் டிவி அதை நேரிடையாக செய்திருக்கலாம் ..
இது தான் ஆரம்பமோ என்னவோ ?

வாக்குமூலம்! said...

! இப்போ சண் தொலைக்காட்சிக்கு சாமி கப்பம் கொடுக்க மறுத்ததாலோ அல்லது டீல் பேசிப் பாத்தப்போ நம்மளுக்குப் படியமட்டேங்குது சாமிக்குப்படிஞ்சிற்ராளப்பா என்னும்வருத்தமோ தான் சண் டிவியின் இத்துணை ஆர்பாட்டம். என்று வைத்துகொள்ளலாம். இல்லையெனில் மதுரையில் மாமா அழகிரி ஆடாத ஆட்டமா?எத்தனை பெண்களை டீல் பேசி
சங்...ங்காரம் செய்தார் அவர் என சண்தொலைகாட்சியால் சொல்லத்தான் முடியுமா? இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியம் தான்..
அதுசரி எங்கப்பா? புனிதத்தன்மை,கற்பு, கௌரவம் என்றுகுமுறுகிற ஒட்டு மொத்ததிரையுலகமே மௌனமாயிருக்கிறதப் பார்த்தா ஆளுக்காள் சாமிக்கிட்ட இரகசியமா போய்வந்திருப்பாங்களோ என்று எண்ண ரொம்பஆதங்கமா இருக்கு !
சாமிய உருவாக்கிறதும் நாங்க தான்... சமயம் பார்த்து உதைக்கிறது நாங்கதான் நாம தான் நாய் ஜென்மம்.
ரமோனா

பூங்குழலி said...

இப்போ சண் தொலைக்காட்சிக்கு சாமி கப்பம் கொடுக்க மறுத்ததாலோ அல்லது டீல் பேசிப் பாத்தப்போ நம்மளுக்குப் படியமட்டேங்குது சாமிக்குப்படிஞ்சிற்ராளப்பா என்னும்வருத்தமோ தான் சண் டிவியின் இத்துணை ஆர்பாட்டம். என்று வைத்துகொள்ளலாம்.


இதுக்கு வேற ஏதோ பின்னணி இருக்க மாதிரி தான் தோணுது .இப்ப திடீருன்னு புலித்தோல் எங்கிருந்து வந்தது ?ஆசிரமத்தில் சந்தனக் கட்டைன்னு வெவகாரம் கொஞ்சம் பெருசா போகுது ....

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

ரஞ்சிதாவே இந்த வீடியோவை பதிவு செய்ததாக தற்போது வந்திருக்கும் ஒரு தகவல்.

நீங்கள் கூறுவதுபோல ஒன்று சாமியாருக்கு புகழ் அதிகமாகும் இல்ல மீடியாக்கள் மிக பிரபலம் அடையும்...