இன்னுமொரு நற்செய்தி .....
ஆறு வருடங்களாக பிரிந்திருந்த என் நோயாளியின் மனைவியும் குழந்தையும் அவருடன் சேர்ந்தார்கள் .
பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்கு சென்ற இவர் மனைவி அதற்குள் ஏற்பட்ட மனக்கசப்பு, சிறு சிறு சச்சரவுகளை காரணம் காட்டி இத்தனை ஆண்டுகளாக திரும்ப வரவேயில்லை .இவர் தேடிப் போனாலும் இவரிடம் முகம் கொடுத்தும் கூட பேசாமல் விரட்டி வந்தார் .இவர் சென்னையிலும் இவர் மனைவி பெங்களூரூவிலும் தனித்தனியே வாழ்ந்து வந்தனர் .
இவருக்கும் தனக்கு எச்.ஐ.வி இருக்கிறதே ,தன்னால் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தர முடியுமா ?தன்னால் நன்றாக வாழ முடியுமா என்றெல்லாம் பயம் இருந்ததால் இவரும் அவர்களை தன்னுடன் வந்து வாழுமாறு கட்டாயப்படுத்தவில்லை .தன் மகளையே தாழ்வு மனப்பான்மை ,குற்ற உணர்வு காரணமாக இவர் சில வருடங்களாக பார்க்கவில்லை .
கடந்த மாதத்தில் ஒரு நாள் தன் மனைவியை என்னிடம் அழைத்துவந்தார் .இருவருக்கும் நோய் குறித்துப் பல சந்தேகங்கள் இருந்ததால் அதைப் போக்கும் பொருட்டு .அப்பொழுதே அவர் மனைவி சொன்னார் ,"என் மகள் இவரை புகைப்படத்தில் மட்டுமே சரியாக பார்த்திருக்கிறாள் .ஆனாலும் இவர் சில நாட்களுக்கு முன் பெங்களூரூ வந்த போது 'என் அப்பா 'என்று இவரை கட்டிக் கொண்டாள் .ஆறு ஆண்டுகளை வீணடித்து விட்டோம் "என்று .
இன்று உள்ளம் கொள்ளா ஆனந்தத்துடன் அவர் வந்து கூறிச் சென்றார்,"என் மனைவியும் மகளும் என்னுடனே வந்துவிட்டார்கள் .மகளின் பள்ளி காரணமாக இந்த ஆண்டு இறுதி வரை அவள் அங்கேயே இருக்கட்டும் ,நாம் வாரம் ஒரு முறை சென்று பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறோம் "என்று .
இனி வரும் ஆண்டுகள் நலமே நல்கட்டும் .
Saturday, 3 January 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இன்று உள்ளம் கொள்ளா ஆனந்தத்துடன் அவர் வந்து கூறிச் சென்றார்,"என் மனைவியும் மகளும் என்னுடனே வந்துவிட்டார்கள் .மகளின் பள்ளி காரணமாக இந்த ஆண்டு இறுதி வரை அவள் அங்கேயே இருக்கட்டும் ,நாம் வாரம் ஒரு முறை சென்று பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறோம் "என்று .///
நல்ல பதிவு!!!
நிறைய எழுதுங்க!!!
தேவா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவா
Post a Comment