பதினெட்டே வயது நிரம்பிய செவித்திறன் ,பேசும் திறன் இழந்த ஒரு பெண் .அழகானவர் .இந்த பெண்ணை மணந்து கொள்ள ஒருவன் முன்வந்தான் .மகிழ்ச்சியாக அவர் பெற்றோரும் திருமணம் (அனைத்து சீர்களோடும் தான் ) செய்து வைத்தனர் .திருமணம் முடிந்து சில மாதங்கள் இந்த பெண்ணுடன் வாழ்ந்த அவன் ,அகப்பட்ட நகைகளை சுருட்டிக் கொண்டு ஒரு நாளில் காணாமல் போனான் .
அதன் பின் இந்த பெண் அடிக்கடி நோய்வாய்ப் படவும் பரிசோதனை செய்ததில் இந்த பெண்ணுக்கு எச்.ஐ .வி இருந்தது தெரிய வந்தது .அதன் பின் விசாரித்ததில் அவனுக்கும் திருமணத்திற்கு முன்பே நோய் இருந்ததும் தெரிந்தது .மனம் துவண்டு போன அந்த பெண்ணின் பெற்றோர் ,சிகிச்சைக்காக எங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் .இப்போது சிகிச்சைக்கு பிறகு அந்த பெண்
ஆரோக்கியமாகவே இருக்கிறார் .ஒரு நாள் கூட இந்த பெண் முகம் வாடி உற்சாகம் குன்றி நான் பார்த்ததில்லை .எப்பொழுதும் ஒரு சிரிப்புடன் மகிழ்ச்சியாகவே இருப்பார் .நோயின் தன்மை பற்றி சரியாக புரிந்திருக்குமா என்பதே ஐயம் தான் .இவருடன் வரும் இவர் தமக்கையின் முகத்தில் மட்டும் சோகம் அப்பிக் கிடக்கும் .
சென்ற வாரத்தில் மருந்துகள் வாங்கி செல்ல அக்காவும் தங்கையும் வந்திருந்தனர் .நான் படிக்கட்டில் ஏறி வருவதை கண்டவுடன் அந்த பெண்ணுக்கு அப்படி ஒரு உற்சாகம் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை ,ஒரு சிறு குழந்தையின் துள்ளலோடு ஓடி வந்து என்னை கட்டி அணைத்து முத்தமிட்டார் .
நானும் திக்குமுக்காடித் தான் போனேன் இந்த அன்பில் .....
Monday, 5 January 2009
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
பூங்குழலி உங்களது வலைபூ அழாக இருக்கிறது.
அன்புடைமை ஒரு அன்பான நெகிழ்வு
பிச்சுமணி
ஒரு அன்பான நெகிழ்வு
உண்மைதான் ,ரொம்பவும் நெகிழ்ந்து தான் போனேன் .
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
என் குரு ஒஷோவின் வார்த்தைகள்தான் எனக்கு சொல்ல தோன்றுகிறது இங்கே
எவ்வளவு யதார்த்தமாய்:
Falling in love you remain a child; rising in love you mature. By and by love becomes not a
relationship, it becomes a state of your being.
Not that you are in love - now you are love...
OSHO
அந்த பெண்ணும் இவள் தானோ..??
அருமை.
பூங்குழலி உங்களது வலைபூ அழாக இருக்கிறது.
பாராட்டுக்கு நன்றி
அன்புடையார் எல்லாமுடையார்... பிறகென்ன உற்சாகம் வரத்தான் செய்யும் அந்த பெண்ணுக்கு உங்களை பார்த்ததும்.
Post a Comment