கூடை நிறைய சேர்ததிருக்கிறேன்
பல வகையான பழங்களை
கனிந்ததும் கனியாததுமாக பல ரகங்கள்
எங்கே சேர்த்தேன்
எதற்காக ?
என்பதெல்லாம் நினைவில் இல்லை
வெறும் பொழுதுகளில்
ரகம் பிரித்துப் பார்க்கிறேன்
எஞ்சியவற்றை மீண்டும் கூடையில் சுமக்கிறேன்
சில அழுகல் பழங்கள்
தப்பிக் கிடக்கின்றன
மற்றவற்றையும் அழுகச் செய்து கொண்டு
வாடை வரும் வரை
உறைக்கவில்லை
கூடை நிறைய அழுகல் என்று
தெரிவு செய்ய எத்தனித்தால்
கையும் சேர்ந்தே கறைப் பிடிக்கிறது
கூடையை மாற்றலாமோ ?
பல வகையான பழங்களை
கனிந்ததும் கனியாததுமாக பல ரகங்கள்
எங்கே சேர்த்தேன்
எதற்காக ?
என்பதெல்லாம் நினைவில் இல்லை
வெறும் பொழுதுகளில்
ரகம் பிரித்துப் பார்க்கிறேன்
எஞ்சியவற்றை மீண்டும் கூடையில் சுமக்கிறேன்
சில அழுகல் பழங்கள்
தப்பிக் கிடக்கின்றன
மற்றவற்றையும் அழுகச் செய்து கொண்டு
வாடை வரும் வரை
உறைக்கவில்லை
கூடை நிறைய அழுகல் என்று
தெரிவு செய்ய எத்தனித்தால்
கையும் சேர்ந்தே கறைப் பிடிக்கிறது
கூடையை மாற்றலாமோ ?
1 comment:
பழங்கள் அழுகுவதற்கு என்ன காரணங்கள் இருக்க முடியும்? பார்த்துப் பொறுக்காததா அல்லது பராமரித்து வைக்காததா? இருந்தாலும் மொத்தக்கூடையும் அழுகத் தொடங்கும்போது, பழத்தின் மீது தானே பழி போடத் தோன்றுகிறது?
பழக்கூடைக்குள்ளும் ஒரு பாடசாலை இருக்கிறது போலும்.
த.வே
Post a Comment