ஒரு பட்டாம் பூச்சியாய்
என்னை கடந்து போகின்றன
என் சந்தோஷங்கள்
விரட்டிக் கொண்டே போகிறேன் நான்
என்னை தாண்டிப்
பறந்துக்கொண்டேயிருக்கிறது அது
எட்டிய போதெல்லாம்
கையில் பட்டது
மகரந்தமும் வர்ணங்களும் தான்
மகரந்த வாசனையும்
வர்ணத்தின் ஸ்பரிசங்களும்
இத்தனை சுகமென்றால்
பிடித்தே ஆக வேண்டும்
என்று விரட்டுகிறது மனம்
முழுதாய் பிடித்து விட்டால்
எதை தான் விரட்டவென்று
பறக்க விட்டுக் கொண்டே இருக்கிறேன் நான்
என்னை கடந்து போகின்றன
என் சந்தோஷங்கள்
விரட்டிக் கொண்டே போகிறேன் நான்
என்னை தாண்டிப்
பறந்துக்கொண்டேயிருக்கிறது அது
எட்டிய போதெல்லாம்
கையில் பட்டது
மகரந்தமும் வர்ணங்களும் தான்
மகரந்த வாசனையும்
வர்ணத்தின் ஸ்பரிசங்களும்
இத்தனை சுகமென்றால்
பிடித்தே ஆக வேண்டும்
என்று விரட்டுகிறது மனம்
முழுதாய் பிடித்து விட்டால்
எதை தான் விரட்டவென்று
பறக்க விட்டுக் கொண்டே இருக்கிறேன் நான்
2 comments:
விட்டு விடலாமே!
பறப்பதைத் துரத்துவதில் இருக்கிற குதூகலம் பிடிப்பதில் சில சமயங்களில் இருப்பதில்லையே!
த.வே
ரொம்ப சரி த வே ..நீங்கள் சொன்னது
Post a Comment