Monday 13 July 2009

வடை

இது சமையல் குறிப்பு இல்லை .


ஒரு பதினைந்து நாளுக்கு முன்னால ,ஞாயித்துக்கிழமை ,வெண்பொங்கல் செஞ்சேன் .சரி ,நல்லா இருக்குமேன்னு உளுந்து வடைக்கும் மாவு ரெடி பண்ணி வடையும் தட்டிப் போட்டாச்சு .கொஞ்சம் வேகட்டும்ன்னு அடுப்புல தீயை குறைச்சிட்டு ,உள்ளே போனா டம்முன்னு சத்தம் .ஓடி வந்து பாத்தா ,போட்டிருந்த நாலு வடையில ஒண்ணைக் காணோம் .அடுப்பு பூரா எண்ணெய் .

எங்கடா வடைன்னு தேடினா அது எங்கயோ ஒரு பக்கத்தில போய் விழுந்திருக்கு .சரி ஏதோ தண்ணி அதிகமாகி தெறிச்சிருக்கும் போலன்னு உள்ளே கிடந்த வடைய திருப்பி போட்டுட்டு நின்னுட்டிருக்கேன் ,திரும்பவும் ஒரு டமார் .இப்ப இன்னொரு வட வெளிய குதிச்சிது .கூடவே ஒரு ரெண்டு கரண்டி எண்ணையும் ...


நல்ல வேளை முன் ஜாக்கிரதையா கொஞ்சம் தள்ளியே நின்னுக்கிட்டிருந்தேன் .அப்படியும் முகத்தில கொஞ்சம் எண்ணெய் பட்டுப் போச்சு .பயத்தில அப்படியே ஓடிப் போய் தண்ணிய முகத்தில அள்ளி அள்ளி ஊத்தினேன் ( பாவ மன்னிப்பு சிவாஜி மாதிரி )எரிச்சல் மெதுவா குறைஞ்சது .அதுக்கப்புறம் அடுப்பை சுத்தம் பண்ணி மிச்சம் இருந்த மாவையும் சுட்டு முடிச்சேன் (என் தைரியத்த என்னாலேயே பாராட்டாம இருக்க முடியல ).


வெளிய குதிச்ச ரெண்டு வடையும் பாத்தா இப்ப வடை மாதிரியே இல்லை .ரெண்டு லேயரா பிரிஞ்சிருந்தது .வெளி ஓடு அப்படியே வெடிச்சு உள்ள ஒரு சுத்து மாவா தெரிஞ்சது .இதுக்கு என்ன பேர் வைக்கலாம்ன்னு இன்னமும் யோசிச்சிட்டுருக்கேன் .


முகத்தில ஒரு பக்கத்தில மட்டும் இப்ப ரெண்டு மூணு தழும்பு இருக்கு .நிஜமாவே நிலா மாதிரி இருக்கு என் முகம் இப்ப ....


5 comments:

யூர்கன் க்ருகியர் said...

வடையதான் நாம சுடுவோம்..
முதல் முறையா வடை உங்கள சுட்டுடுச்சி! ஹ ஹ ஹா !

துளசி கோபால் said...

அச்சச்சோ...(-:

வடை என்றதும் ஓடோடி வந்தேன்!

உப்பு சரியாக் கலக்கலைன்னாலும் இப்படி வெடிக்குமாம்.

ரெடிமேட் மாவா?

சமைக்கும்போது அடுப்புடன் உறவு கொஞ்சம் தள்ளியே இருக்கட்டும். கவனமா இருங்க.

யூர்கன் க்ருகியர் said...

//எங்கடா வடைன்னு தேடினா அது எங்கயோ ஒரு பக்கத்தில போய் விழுந்திருக்கு //
வட போச்சே ! ?

பூங்குழலி said...

வடையதான் நாம சுடுவோம்..
முதல் முறையா வடை உங்கள சுட்டுடுச்சி! ஹ ஹ ஹா !

இப்படி ஒரு சந்தோஷமா ?

எங்கடா வடைன்னு தேடினா அது எங்கயோ ஒரு பக்கத்தில போய் விழுந்திருக்கு //
வட போச்சே ! ?

அதான் தேடிப் பிடிச்சாசில்ல ..

பூங்குழலி said...

அச்சச்சோ...(-:
:(((((((((

வடை என்றதும் ஓடோடி வந்தேன்!
?????????

உப்பு சரியாக் கலக்கலைன்னாலும் இப்படி வெடிக்குமாம்.

ஓஹோ ? இருக்கலாம்

ரெடிமேட் மாவா?

இல்லை

சமைக்கும்போது அடுப்புடன் உறவு கொஞ்சம் தள்ளியே இருக்கட்டும். கவனமா இருங்க.

ரொம்ப நன்றி