ரெண்டு வருஷத்துக்கு முன்னால சிம்லா போயிருந்தப்ப இது நடந்தது .நாங்க அங்க இருந்தப்ப தான் மம்மி பார்ட் த்ரீன்னு நெனைக்கிறேன் ,ரிலீஸ் ஆயிருந்துது .என் கணவரும் என் பிள்ளைகளும் ஒடனே படத்த பாக்கணும் முடிவு பண்ணிட்டாங்க .என் கணவரோட நண்பர் ஒருத்தர் சிம்லாவில இருந்தார் .அவர் நானும் வரேன்ன்னு டிக்கட்டுக்கும் ஏற்பாடு பண்ணிட்டாரு .நைட் ஷோ .இது ஹிந்தி டப்பிங்கா இருக்கப் போகுது அத விசாரிச்சிக்கோங்கன்னு சொன்னா யாரும் கண்டுக்கல .
ராத்திரி படத்துக்கு கெளம்பியாச்சு .ஊருக்கு அடியில தியேட்டர் .நிசமா தான் .ஊருக்கு அடியில த்ரில்லர் படத்துல சேஸ் சீன்ல வர்ற அண்டர்கிரவுண்ட் டனல் மாதிரி ஒரு வழியில போனோம் .ரொம்ப தூரமா இருந்துது .நடந்து தான் வர்ற முடியுமாம் .டனல் ஏதோ பிரிட்டிஷ் காலத்துல கட்டினதாம் .அங்கங்க மேலேயிருந்து தண்ணி சொட்டு சொட்டா விழுந்துகிட்டு இருந்துது .அப்பப்ப ஒண்ணு ரெண்டு எலி வேற .
இத கடந்து போனா தியேட்டர் ?ஆள் அரவமே இல்லாத ஒரு எடம் .வெளிய ஒரு பிட்டு படம் போஸ்டர் .பக்குன்னு இருந்துச்சு .சரி உள்ளூர் காரர் தான் ஒருத்தர் தொணைக்கு இருக்காரேன்னு தைரியமா போய்ட்டோம் .ஷோ நேரம் ஆகிடுச்சி .ஒரு ஆளு கூட இல்ல .வாசலில ஒரு லைட்டு .கதவு தெறந்திருந்திச்சி. தெறக்காத ஒரு பாப்கார்ன் மிஷீன் .அவ்வளவு தான் .சரியான எடத்துக்கு தான் வந்திருக்கோம்ன்னு நண்பர் சொன்னாரு .திரும்பி போயிடலாம்ன்னு சொன்னேன் .வசதியா சத்தியத்துல போயி படத்த பாத்துக்கலாம்ன்னு சொல்லி பாத்தேன் .இல்ல இவ்வளவு தூரம் வந்துட்டு ,என்னன்னு விசரிக்கலாம்ன்னு கேட்டா ,மொத்தம் அஞ்சு டிக்கட் தான் வித்திற்கு (நாங்க அஞ்சு பேர் தான் ).இன்னும் கொஞ்ச பேர் வந்தா படம் போடுவோம் இல்லைன்னா ஷோ கேன்சல்ன்னு சொல்லிட்டாங்க .
கொஞ்ச நேரம் கழிச்சு ஒருத்தர் வந்து உள்ள போய் உக்காந்துக்கோங்கன்னு சொன்னார் .நா இன்னும் கொஞ்ச பேர் வந்த பின்னாடி போலாம்ன்னு சொன்னேன் .யாரு கேக்கப் போறா ?உள்ள போயாச்சு .ஹோன்னு இருந்துச்சி .நாங்க அஞ்சு பேர் மட்டும் .கொஞ்ச நேரம் கழிச்சு இன்னும் ரெண்டு பேர் வந்தாங்க .படம் பாத்தா ஹிந்தி டப்பிங் .ஒரு மண்ணும் புரியல .ஷோவ கேன்சல் பண்ணியிருந்தா கூட பரவாயில்லைன்னு தோணிச்சு .கிழிஞ்ச சீட் .காலுக்கடியில அங்கேயும் இங்கேயும் ஓடிக்கிட்டிருந்த எலி .ரொம்ப கிலியாவே இருந்துது .நல்லவேளை இன்டர்வெல் இல்லாம படத்த போட்டாங்க .பாஸ்ட் பார்வர்ட் பண்ணியிருந்தா கூட சந்தோஷப்பபட்டிருப்பேன்.
இப்படியா திகில்லாவும் தில்லாவும் படம் பாத்து முடிச்சோம் .
தெரியாத ஊருல படம் பாக்கப் போகக் கூடாதுன்னு நல்லா புரிஞ்சுது .
Monday, 8 March 2010
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
:-) வித்தியாசமா இருந்துச்சு....உங்க அனுபவ பகிர்வு!
ம்ம்ம்...நல்லாயிருந்தது...
செம காமடியா இருக்கு.. இப்பலாம் நெறய தமிழ் படவே அப்படித்தான் ஓடுது
வித்தியாசமா இருந்துச்சு....உங்க அனுபவ பகிர்வு!
ரொம்பவே வித்தியாசமான அனுபவம் தான் எனக்கும் சந்தனமுல்லை...
செம காமடியா இருக்கு
என்னோட வேதனை உங்களுக்கு காமெடியா ?ம்.. ம்...ம்.. இப்ப நினைச்சு பார்த்தா காமெடியா தான் இருக்கு ...
வணக்கம்மா...
உங்களது முன் யோசனையான பேச்சை உடன் வந்தவர்களும் கேட்டிருந்தால்...பொன்னான சில மணி நேரங்களை வேறு விதத்திலாவது செலவிட்டு மகிழ்ந்திருக்கலாம்..!
Post a Comment