சிங்காரச் சென்னையின் சாலைகளை அழகு படுத்துவதற்காக முக்கிய சாலைகளில் ஓவியங்கள் வரையப்படுவது தெரிந்ததே .அதே போல் நமது அரசுக்கு தமிழ் மீதும் தமிழர் பண்பாட்டின் மீதும் உள்ள அளவிட முடியாத பற்றும் தெரிந்ததே :)
இரண்டு வாரங்களாக கிரீன்வேஸ் சாலையில் இந்த ஓவிய வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன .இதில்ஒரு பக்கம் ,அழகிய இயற்கை காட்சிகள் வரைந்து முடித்தாயிற்று .இன்னொரு பக்கம் ,சிலப்பதிகாரக் காட்சிகளை வரைந்து கொண்டிருக்கிறார்கள் .இதுவரையிலும் சரிதான் .
கண்ணகி சிலையை ஒரு அரசு வைத்ததும் ,இன்னொரு அரசு எடுத்ததும் ,மீண்டும் ஒரு அரசு வைத்ததும் நாம் அறிந்ததே .இதற்காக தமிழர் பண்பாட்டு சின்னம் கண்ணகி என்றும் அதை அகற்றியது தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று முழங்கியதும் கூட தெரிந்த விஷயம் தான் .(இந்த சிலையை பார்க்கும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது ,என் அம்மா சொன்னது ,"கண்ணகிய அவ புருஷனும் தெருவில நிப்பாட்டுனான் .இவங்களும் தெருவில நிப்பாட்டிட்டாங்க .")
இப்போது தெருவோரத்தில் சுவற்றில் கண்ணகியை வரைந்து கொண்டிருக்கிறார்கள் .சிலப்பதிகாரத்தை மக்களுக்கு நினைவுபடுத்தும் இந்த முயற்சி பாராட்டப்படவேண்டியதே .ஆனால் ...............நமது சாலையோர சுவர்கள் பொது கழிப்பிடங்களாக பயன்படுவது தெரிந்த விஷயம் ....இந்நிலையில் சுவற்றில் கண்ணகியை வரைவது சரியா ?இதனால் தமிழர் பண்பாட்டு சின்னம் அடையக் கூடிய அவமானத்திற்கு யார் பொறுப்பு ?

4 comments:
ஆமாமாம். கண்ணுக்கு விருந்தாச்சு காரியம் செய்யும்போது:(
/*கண்ணகிய அவ புருஷனும் தெருவில நிப்பாட்டுனான் .இவங்களும் தெருவில நிப்பாட்டிட்டாங்க*/
:-(
/*இதனால் தமிழர் பண்பாட்டு சின்னம் அடையக் கூடிய அவமானத்திற்கு யார் பொறுப்பு ?
*/
ஹ்ம்... நீங்க சொல்றதும் சரிதான். நம்ம ஊரு பத்தி தெரியும் பொழுது சும்மா இயற்கையை வரைஞ்சுட்டு விட்டுடலாம் தான்...
,"கண்ணகிய அவ புருஷனும் தெருவில நிப்பாட்டுனான் .இவங்களும் தெருவில நிப்பாட்டிட்டாங்க ."
சிலநேரங்களில் எதிர்பாராமல் கிட்டும் நச் விமர்சனங்கள்..
ஆமாமாம். கண்ணுக்கு விருந்தாச்சு காரியம் செய்யும்போது
சும்மா இயற்கையை வரைஞ்சுட்டு விட்டுடலாம் தான்...
ம்ம்ம் ...வரைஞ்சு முடிச்சதும் யாரு கண்டுக்கப் போறாங்க
சிலநேரங்களில் எதிர்பாராமல் கிட்டும் நச் விமர்சனங்கள்..
உண்மைதான் ரிஷபன் .....
Post a Comment