Thursday, 25 March 2010

வேர் தேடும் கிளைகள்


விதையுள் முளையாக
ஒன்றாக கிடந்த வேரும் கிளையும்
வானோக்கி ஒன்றும்
மண்நோக்கி ஒன்றுமாய்
வெவ்வேறாய் வளர்ந்து போயின .

பின்னாளில் ,
கிளை விண்தொட்ட பின்னும்
வேர் மண் தூர்த்த பின்னும்
ஒன்றாய் கிடந்தும் காணாததை எண்ணி,
கிளை கீழ் வர முடியாமலும்
வேர் மேல் எழ முடியாமலும்
அயர்ந்தும் போயின .

அதிசயமாய் ,
கிளை தொட்டு வேரொன்று விழுதாக கிளம்பி
மண் பிளந்து வேர் தேடி செல்லும்.
மண்ணடியில்,
வேரும் ,கிளையின் வேரும்
எவரும் காணாமல் நீருருஞ்சிக் கொண்டே
பழங்கதைகள் பேசிக் கிடக்கக் கூடும் ....


2 comments:

கவிநா... said...

excellent அக்கா... ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க...

// விதையுள் முளையாக
ஒன்றாக கிடந்த வேரும் கிளையும்
வானோக்கி ஒன்றும்
மண்நோக்கி ஒன்றுமாய்
வெவ்வேறாய் வளர்ந்து போயின .//

இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடித்தது... அழகா இருக்குங்க அக்கா..

--
அன்புடன்
கவிநா...

பூங்குழலி said...

நன்றி கவிநா