Tuesday 10 March 2009

அது ஒரு பூக்காலம்


அது ஒரு பூக்காலம்
பாரமான நீர்த் துளிகளை
சடுக்கென்று உதறி விட்டு
சட்டென்று நிமிர்ந்து விடும் பூவாக
சிரித்து திரிந்த பூக்காலம்


இதுவும் ஒரு பூக்காலம்
எங்கோ தன் இதழில்
கீறி விட்ட ஒரு வலியில்
முழுவதுமாய் வாடும் பூவாக
முட்களுக்கஞ்சும் பூக்காலம்


6 comments:

Ungalranga said...

அருமை...
நல்லா இருக்கே...

இன்னும் எழுதுங்க..
வாழ்த்துக்கள்

சக்தி சக்திதாசன் said...

அன்பின் பூங்குழலி,

கவிதை அருமையாக இருக்கிறது.

வாழ்த்துக்கள்

அன்புடன்
சக்தி

ஆர்.வேணுகோபாலன் said...

இயற்கையின் வினோதமான கொடுமை இது தான்: கீறி விடுகிற முட்களைப் பூக்களின் பக்கத்திலேயே எப்போதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும்படிப் படைத்து விட்டதே!

அழகான ஆதங்கம்!!

த.வே

பூங்குழலி said...

நன்றி ரங்கன் உங்கள் ஊக்குவிப்புக்கு

பூங்குழலி said...

மிக்க நன்றி சக்தி அய்யா

பூங்குழலி said...

எப்போதும் கருத்துரை போன்ற உங்கள் அழகான வரிகளுக்கு நன்றி த வே