Tuesday, 12 May 2009

ஊருக்கு போனேன்

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பின் ஆலடிப்பட்டிக்கு சென்று வந்தேன் கோவில் கொடை பார்க்க .சின்ன வயதில் பாட்டியோடு கொடை பார்த்த ஞாபகம் லேசாய் மனதில் . எதுவும் சரியாக நினைவில்லை .

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் அவசரமாய் வைத்தியலிங்க சாமியை பார்த்துவிட்டு ஓடி வந்த ஞாபகம் ,நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் என் பெரியப்பாவின் அஸ்தியை புதைத்து கல்லறை கட்ட போன ஞாபகம் எனப் பல ஞாபகங்கள் ரயிலில் ஏறியதிலிருந்து .இத்தனை காலமாக ஏன் போகாமலிருந்தோம் என்ற கேள்வியும் கூட .

இத்தனை சுகானுபவமாய் இருக்க போகிறதென்று அறியாமலேயே கிளம்பினேன் .இன்னமும் என் காதுகளில் மேள சத்தமும் , கூட்டத்தின் சலசலப்பும் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறது .


2 comments:

ஆயில்யன் said...

//இத்தனை சுகானுபவமாய் இருக்க போகிறதென்று அறியாமலேயே கிளம்பினேன் .இன்னமும் என் காதுகளில் மேள சத்தமும் , கூட்டத்தின் சலசலப்பும் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறது//

பயண களைப்பினை,கடந்து சென்ற நாட்களின் நினைவுகளோடு கலந்து கரைத்துவிட்டு,

பயண அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!

கிராமப்புற விழாக்கள் பற்றிய அனுபவங்களை கேட்க ஆசையோடு காத்திருக்கிறோம் :)

பூங்குழலி said...

நிச்சயம் சொல்லப் போகிறேன் ஆயில்யன்