Monday 18 May 2009

ஊருக்கு போனேன்

ஊரே மாறிப் போயிருக்கிறது .

எல்லா வீடுகளும் ஒரே அச்சில் வார்த்து வரிசையாக அடுக்கி வைத்தாற் போல் இருக்கும் முன்பெல்லாம் .இப்போது எல்லோரும் அவரவர் வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப வீடுகளை மாற்றிக் கட்டிக் கொண்டுள்ளனர் .

எல்லா வீட்டு திண்ணைகளிலும் பெண்கள் அமர்ந்து பீடி சுற்றிக் கொண்டிருப்பார்கள் எப்போதும் .இப்போது ஏதோ ஒரு தெருவில் மட்டுமே பெண்கள் பீடி சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் .அனேக பெண்கள் படித்துவிட்டு பணிக்கு செல்கிறார்கள் ,குறிப்பாக ஆசிரியப் பணி.

விருந்தினர் வந்தால் சட்டென்று எவராவது அருகிலுள்ள கடைக்கு சென்று டீயோ காபியோ வாங்கிக் கொண்டு வருவார்கள் .இப்போது எல்லாம் வீட்டிலேயே செய்கிறார்கள் .

நிறைய மாறித்தான் போயிருக்கிறது .ஆனால் ,இன்னமும் இவர்களின் அன்பும் ,"நல்லா பழக்கம் விடுதாளே!" என்று மகிழ்ந்து கொள்ளும் இவர்கள் பாசமும் மாறாதிருக்கிறது .


8 comments:

Samuthra Senthil said...

வணக்கம் பூங்குழலி..

நீண்ட நாட்களுக்கு பிறகு வலைதளங்களை வாசித்துக் கொண்டிருந்தேன். தமிழ்மணத்தில் ஆலடிபட்டி என்று வந்ததும் கிளிக்கினேன். உங்கள் பதிவுகளில் ஆலடிபட்டி என்ற தலைப்பில் இருக்கும் பதிவுகளை மட்டும் படித்து பார்த்தேன். எனக்கும் ஆலங்குளம் அருகேதான் சொந்த ஊர். ஆலடிபட்டியில் எனக்கு நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். நல்லூர் வைத்திலிங்க சாமி கோயிலில்தான் கடந்த ஓராண்டுக்கு முன் நானும், எனது மனைவியும் கைகோர்த்தோம். தற்போது மதுரையில் பத்திரிகையொன்றில் துணைஆசிரியராக பணியாற்றி வருகிறேன். சொந்த மாவட்டத்து பதிவர் என்பதாலோ என்னவோ உங்களது இயல்பான எழுத்துக்கள் எனக்கு பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள். மேலும் மேலும் பல நல்ல பதிவுகளை எழுத வாழ்த்துகிறேன். நன்றி!

இப்போ கமெண்ட்...

//நிறைய மாறித்தான் போயிருக்கிறது .ஆனால் ,இன்னமும் இவர்களின் அன்பும் ,"நல்லா பழக்கம் விடுதாளே!" என்று மகிழ்ந்து கொள்ளும் இவர்கள் பாசமும் மாறாதிருக்கிறது . //

எத்தனையெத்தனை ஆண்டுகள் ஆனாலும் நெல்லை மாவட்டத்துக்கு என்று ஒரு பாசம் இருக்கிறது. அந்த பாசத்தின் வெளிப்பாடு எந்த ஊருக்கு சென்றாலும் கிடைக்காது. அவர்களது அன்பும் - பாசமும், நெல்லை மாவட்டத்து பேச்சுவழக்கு போல... என்றுமே மாறாது. என்ன சொல்லுதிய... நா சொன்னது சரிதான..?

தருமி said...

பூங்குழலி, சினிமா நிரூபர் (எனக்கும் ஆலங்குளம் அருகேதான் சொந்த ஊர்.)

என்னங்கப்பா இது? இதை கொஞ்சம் வாசித்துப் பாருங்களேன்: http://dharumi.blogspot.com/2006/01/115-1.html

யாருங்க நீங்கல்லாம்?!

தருமி said...

மன்னிக்கணும் .. அப்படியே http://sixth-finger.blogspot.com/2006/07/when-i-look-back-2.html - இதையும் வாசிச்சி பாருங்களேன்.

ஆலடிப்பட்டி அம்மன்கொடை பத்தி எழுதணும்னு ரொம்ப நாளா ஆசை........

Samuthra Senthil said...

தருமி...

நீங்களும் நம்ம மாவட்டத்துக்காரர் தானா? நெல்லை மாவட்டத்து பதிவர்கள் வேறு யார் யார் இருக்கிறார்கள். தெரிஞ்சா சொல்லுங்க...!

தருமி said...

என் பதிவில் எனது முகவரி உள்ளதே. பதில் போடுங்களேன்.

Samuthra Senthil said...

தருமி.. உங்களது மெயிலுக்கு தனிமடல் அனுப்பியிருக்கிறேன். பாடித்துவிட்டு பதில் எழுதுங்கள்.

பூங்குழலி said...

ஆலங்குளத்துக்காரர்கள் நிறைய பேர் இருப்பார்கள் போலிருக்கிறதே !நன்றி நண்பர்களே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

யாருங்க நீங்கல்லாம்?!

?????????

தருமி said...

//தருமி...

நீங்களும் நம்ம மாவட்டத்துக்காரர் தானா?//

ஹா ..! எங்க ஊர் காசியாபுரத்துக்காரரே ஒருவர் இருக்கிறாரே!