Thursday 21 May 2009

பள்ளியில்

நான் 12 படிக்கும் போது எங்க வகுப்பு தான் பள்ளியிலேயே அதிகம் சேட்டை செய்யற வகுப்புன்னு (most indisciplined class ) எங்க மேல ஒரு முத்திரை இருந்தது .எங்களுக்கெல்லாம் அறிவு அதிகமா இருந்ததால இந்த பிரச்சனை ன்னு நினைக்கிறேன் .ஏன்னா அப்புறம் அதிக மதிப்பெண் வாங்கின வகுப்பும் என்னோடது தான். ரொம்ப வருஷமா இந்த பேர் வாங்கியிருந்த பல வகுப்புகள் பன்னிரண்டில் பொறுப்பு வந்து திருந்தினப்புறம் கூட நாங்க மாறல . இதிலே SPLன்னு அழைக்கப்பட்ட ஸ்கூல் பியுபில் லீடர் ,இன்னும் பல ஸ்கூல் அமைச்சர்கள் இருந்த வகுப்பு என்னோடது (நான் போக்குவரத்து துறை அமைச்சர் ).

எங்க வகுப்புக்கு அடுத்த வாசல் ஸ்டாப் ரூம் வேற .
தினம் இம்போசிஷன் எழுதலைன்னா பள்ளிக்கு போன மாதிரியே இருக்காது .முதல்ல நிக்க வைப்பாங்க ,கொஞ்ச நேரம் வாய மூடிக்கிட்டு நிக்கலாம் ,அப்புறம் ....?அடுத்தது இம்போசிஷன் எழுத சொல்வாங்க ...பல நேரங்கள்ல மொதல்லேயே எழுதி வச்சிருப்போம் .இதில ஒரு தடவ எங்க வகுப்புல ரெண்டு பேருக்கு போட்டி .யாரு ஒரே பக்கத்தில அதிக தடவை எழுதுறாங்கன்னு ."I will not talk in class" ன்னு எழுதணும் .ஒருத்தி "I'll not talk in class " ன்னு எழுத போட்டிக்கு எழுதினவ "I'll talk in class "ன்னு எழுதிட்டா .அப்புறம் மிஸ் பாத்திட்டு இன்னும் ஐந்நூறு தடவ எழுத சொன்னாங்க .

இதுக்கு மேல போயி ஒரு தடவ எல்லாரும் கிரவுண்ட சுத்தி மூணு ரவுண்ட் ஒடனும்ன்னு சொன்னாங்க எங்க இங்கிலீஷ் மிஸ் .கீழ போயி பாத்தோம் .இந்த வெயில (மணி 11.30 போல)சுத்தினா உடம்புக்கும் அழகுக்கும் கேடுன்னு ,கிரவுன்ட் ஓரத்தில ஒரு மரம் இருக்கும் . அரச மரம் வேற .பனிஷ்மெண்டும் ஆச்சு புண்ணியமும் ஆச்சுன்னு நாங்க அத சுத்தி மூணு ரவுண்ட் ஓடிட்டு கிளாசுக்கு போய்ட்டோம் . இவ்வளவு சீக்கிரம் ஓடிட்டீங்களா ன்னு மிஸ் ஆச்சரியப்பட்டு போனாங்க .ஆனா அடுத்த தடவ பாக்க நான் வருவேன்னு சொல்ல மறக்கல .


14 comments:

ஆயில்யன் said...

:))))))))))



//எங்களுக்கெல்லாம் அறிவு அதிகமா இருந்ததால இந்த பிரச்சனை ன்னு நினைக்கிறேன்//

எஸ் !

எஸ் !! பல டீச்சர்ஸ்க்கு பொறாமை கூட வந்து அப்படி செஞ்சுருக்கலாம் :)

ஆயில்யன் said...

//பல ஸ்கூல் அமைச்சர்கள் இருந்த வகுப்பு என்னோடது (நான் போக்குவரத்து துறை அமைச்சர் ).//


அடேங்கப்பா ! பிளஸ் டூவுலயே போக்குவரத்து துறைக்கு அமைச்சார்கிட்டீங்களா! :)

ஆயில்யன் said...

//முதல்ல நிக்க வைப்பாங்க ,கொஞ்ச நேரம் வாய மூடிக்கிட்டு நிக்கலாம் ,அப்புறம் ....?///


சான்ஸே இல்ல! கொஞ்ச நேரமே வாயை மூடிக்கிட்டு நிக்கமுடியாது சிக்னல் கொடுத்து பேச ஆரம்பிச்சிடுவோமே...!

ஆயில்யன் said...

//.இந்த வெயில (மணி 11.30 போல)சுத்தினா உடம்புக்கும் அழகுக்கும் கேடுன்னு ,கிரவுன்ட் ஓரத்தில ஒரு மரம் இருக்கும் . அரச மரம் வேற .பனிஷ்மெண்டும் ஆச்சு புண்ணியமும் ஆச்சுன்னு நாங்க அத சுத்தி மூணு ரவுண்ட் ஓடிட்டு கிளாசுக்கு போய்ட்டோம்/

:))))))))))))))))))))))))))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இந்த இடத்தில் கூட நிறைய சேட்டைக்கார பசங்க இருக்கறாங்க. வந்து பாருங்க தல..,

சந்தனமுல்லை said...

எங்க ஆயில்ஸ் தெரியாம ஏதோ விளையாட்ட போட்டுட்டாரு..ஊசி போட்டுடாதீங்க..மன்னிச்சு விட்டுடுங்க பாவம்!!

சந்தனமுல்லை said...

//பனிஷ்மெண்டும் ஆச்சு புண்ணியமும் ஆச்சுன்னு நாங்க அத சுத்தி மூணு ரவுண்ட் ஓடிட்டு கிளாசுக்கு போய்ட்டோம் .//
நீங்க பரவாயில்ல!! எங்க ஆயில்ஸை அபப்டிதான் ஸ்கூல்ல ஓட சொன்னதுக்கு ஸ்கூல்லேர்ந்தே ஓடி இப்போ பாருங்க தோஹாவிலே போய் நிக்கறார்! அவ்வளவு ஓட்டம்!! :-)

ஆயில்யன் said...

ஆச்சி !

இங்க கும்மி எல்லாம் அடிக்கல எனக்கு புடிச்ச பின்னூட்டம் 4 போட்டேன் அம்புட்டுதான் அதுக்கு ஊசி எடுத்துட்டுவருவாங்களா??

அய்யோ எனக்கு பயமா இருக்கே!

பூங்குழலி said...

எஸ் !! பல டீச்சர்ஸ்க்கு பொறாமை கூட வந்து அப்படி செஞ்சுருக்கலாம் :)

ஆமா அப்படித்தான் இருந்திருக்கணும்

பூங்குழலி said...

அடேங்கப்பா ! பிளஸ் டூவுலயே போக்குவரத்து துறைக்கு அமைச்சார்கிட்டீங்களா! :)

ஒன்னும் பெரிய வேல இல்ல .ஸ்கூலுக்கு சைக்கிள வரவங்க வரிசையா நிப்பாட்டியிருக்காங்களான்னு பாக்கணும் அவ்வளவு தான்

பூங்குழலி said...

எங்க ஆயில்ஸ் தெரியாம ஏதோ விளையாட்ட போட்டுட்டாரு..ஊசி போட்டுடாதீங்க..மன்னிச்சு விட்டுடுங்க பாவம்

இங்க கும்மி எல்லாம் அடிக்கல எனக்கு புடிச்ச பின்னூட்டம் 4 போட்டேன் அம்புட்டுதான் அதுக்கு ஊசி எடுத்துட்டுவருவாங்களா??

அய்யோ எனக்கு பயமா இருக்கே!


நல்லதா நாலு வார்த்த எழுதியிருக்கீங்க ..இதுக்கு போயி ஊசி போடுவாங்களா ?

பூங்குழலி said...

நீங்க பரவாயில்ல!! எங்க ஆயில்ஸை அபப்டிதான் ஸ்கூல்ல ஓட சொன்னதுக்கு ஸ்கூல்லேர்ந்தே ஓடி இப்போ பாருங்க தோஹாவிலே போய் நிக்கறார்! அவ்வளவு ஓட்டம்!! :-)


பெரிய ஓட்டக்காரரா இருப்பாரு போல

பூங்குழலி said...

கண்டிப்பா வந்து பாக்கிறேன் SUREஷ்

joe said...

good discussion. it reminded me of my school days. - Joe