Friday, 27 February 2009

என் முறை ?

காத்திருக்கிறேன்
இது என் முறையாக இருக்கக் கூடும்
என் வெப்பம் ஏறிக்கொண்டே இருக்கிறது
இல்லை இதுவும் என் முறை இல்லை


என் இதயம் அடங்காமல் துடித்துக்கொண்டிருக்கிறது
என் அருகில் இன்னும் சில இருக்கைகளில் காற்று குடியேறுகிறது
என் இருக்கையில் நான் மட்டும் அடைத்துக்கொண்டு
கதவு திறக்கப்படும் போதெல்லாம்
குளிர் என் மயிர்க்கால்களை கூசச் செய்கிறது


எப்போது என் முறை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
வரிசைப் படி என பதில் வந்த படியே
உள்ளே போன தேநீர் கோப்பைகள் கூட
என் வெப்பத்தில் இன்னமும் சூடாகவே இருக்கும்
தூக்கம் வருவது போல் பாசாங்கு செய்து கொண்டே இருக்கிறது
அதை எட்டிப்பிடிக்க கண்கள் துடித்துக்கொண்டே

கதவு திறந்து மூடுவது தூரமாய் தெரிகிறது
இங்கில்லாதவர்களும் இருப்பவர்களும் கலவையாய் தெரிகிறார்கள்
எங்கோ என் பெயர் போல் கேட்கிறது
என்னருகே ஏதோ அலறல்களும்
கதவு திறக்கும் சத்தமும் ......
இப்போது மருத்துவமனையே என்னை சுற்றி


6 comments:

மதுமிதா said...

nice . v.pitchumani

பூங்குழலி said...

நன்றி பிச்சுமணி

geevanathy said...

//எங்கோ என் பெயர் போல் கேட்கிறது
என்னருகே ஏதோ அலறல்களும்
கதவு திறக்கும் சத்தமும் ......//

அருமை..

பூங்குழலி said...

நன்றி ஜீவன்

ஆர்.வேணுகோபாலன் said...

இந்த உலகத்திலேயே மருத்துவமனையில் காத்திருக்கிற ஒன்றுதான் விதிவிலக்கேயின்றி அனைவரையும் நிலைகொள்ளாமல் தவிக்க வைக்கிறதோ? உடல்நலம் குன்றியவர்களுக்கு காத்திருக்கிற பொறுமை குறைவதற்கு ஏதாவது உளவியில்ரீதியிலான காரணங்கள் உண்டோ? எது எப்படியோ, எல்லார்க்கும் ஏற்படுகிற அந்தக் கொஞ்ச நேரத்தவிப்பை அப்படியே படம் பிடித்துப் போட்டிருக்கிறீர்கள்! பாராட்டுக்கள் -த.வே

பூங்குழலி said...

கண்டிப்பாக த வே ...வெறும் பரிசோதனைக்கு செல்லும் போது பரவாயில்லை ,ஏதேனும் தொந்தரவோடு செல்லும் போது காத்திருப்பதே பெரிய வேதனை தான் .அதுவும் நம் வேதனை அங்கு உணரப்படாமல் போகும் போது .
வாழ்த்துக்கு நன்றி