என் அம்மா அப்பாவின் திருமண புகைப்படங்களைப் பார்க்கும் போதெல்லாம் இதில் பாட்டி தாத்தா இருவருமே இல்லையே என்று யோசித்திருக்கிறேன் .அம்மாவிடம் கேட்ட போது சொன்னார் ,"பாட்டி என்
கல்யாணத்திற்கு வரவே இல்லை ",என்று .
பிறகு ஒரு சமயம் பாட்டியுடன் இருந்த போது இது நினைவு வர ,
நான் -"ஏன் பாட்டி ,நீங்க அப்பாவோட கல்யாணத்துக்கு போகல ?
பாட்டி -"வேற எவன் கல்யாணத்துக்கு நான் போனேன் ?,"
நான் -"அப்ப யார் கல்யாணத்துக்கும் நீங்க போகலையா ?"
பாட்டி -"போகல "
நான் -"ஏன் போகல? "
பாட்டி -"ஒருத்தன் மெட்ராசில கல்யாணம் வச்சான் ,ஒருத்தன் பொண்டாட்டி ஊர்ல வச்சான் ,உங்கப்பா கல்யாணத்த குத்தாலத்தில வச்சான் ,இதுக்கு எதுக்கு போகணும் ?"
நான் -"அதுக்காக போகாம இருப்பாங்களா ?"
பாட்டி -"அதான் எல்லா பொண்ணும் வீட்டுக்கு தானேளா வரும் பாத்துக்கலாம் ன்னு போகல "
வாயடைத்து போனேன் நான் .
2 comments:
உங்கள் பாட்டியை பற்றிய பதிவுகள் எனது பாட்டியைப் பற்றி எழுத தூண்டுகிறது....
கண்டிப்பா எழுதுங்க
Post a Comment